உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டணி ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலகத்தில் மூன்றாம் நாளாக தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டணி சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணையை எரிக்கும் போராட்டத்தில் நடத்தினர். இதுசம்பந்தமாக 79 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலையில் ஆசிரியர்கள்அனைவர் மீதும் கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கையான அரசாணை17பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த வழக்கினை 2019 பிப்ரவரி மாதம் மதுரை உயர்நீதிமன்றம் மூலம் ரத்து செய்யப்பட்ட பின்னும் தற்போது வரை கல்வித்துறை அரசாணை 17பி-யை ரத்து செய்யப்படாத நிலையில் அரசனை17பி-யை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முதல் நாள் இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இந்நிலையில்  இரண்டாவது நாளாக உசிலம்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா-வை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் நேற்று மூன்றாம் நாளாக ஆசிரியர்கள் அனைவரும் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்    இதில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் மோசஸ் ,மாநில துணைத் தலைவர் ஜோசப்ரோஸ் ,மாநில செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் ஒச்சுக்காளை மற்றும் ஆசிரியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர் .மூன்றாவது நாளான இன்று தொடக்க கல்வி அலுவலா் முத்தையாவை அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.இதனைத் தொடா்ந்து அங்கு வந்த போலிசாா் ஆசிாியா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image