உசிலம்பட்டியில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு இரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 9வருடங்களுக்கு முன்பு மதுரை முதல் போடி வரை இரயில்போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் மீட்டர்கேஜ் பாதையாக இருந்ததால் அதனை மாற்றி அகலப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. நிதி பற்றாக்குறையால் இரயில்வே பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் அதற்கான போதிய நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2வருடங் அகலப்பாதையாக மாற்றும் பணி விரிவுப்படுத்தப்பட்டு உசிலம்பட்டி வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக உசிலம்பட்டி வரையில் இரயில் தண்டவாளத்தில் பெட்டிகளுடன் கூடிய இரயிலை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. கடந்த 9வருடங்களுக்கு பிறகு ரயில் வந்ததை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து ரசித்தனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..