மதுரை ஏடிஎம்மில் தீ

மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் ஒலிக்கவே மதுரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்ற மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி சொந்தமான ஏடிஎம் ஒன்று உள்ளது. இதில்  இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. மேலும் அந்த ஏடிஎம்மில் தீ தடுப்பு காட்டு அலாரம் ஆனது மும்பை தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி அனுப்பியது. இதனைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட தலைமை அலுவலகத்திலிருந்து மதுரை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் உடனடியாக அணைத்ததால் பல லட்ச ரூபாய் பணம் தப்பியது. முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு காரணம் யூபிஎஸ்சி மின் கசிவு ஏற்பட்டது  என தெரியவந்துள்ளது. தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர்  வெங்கடேசன்  தலைமையில் விரைந்த அணைத்தால் பல லட்ச ரூபாய் தப்பியது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image