உசிலம்பட்டி அருகே அமைச்சரின் வருகைக்காக 4 மணி நேரம் காத்துக்கிடந்த ஆட்சியர் மற்றும் பொதுமக்கள்.பசியால் அவதி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள தாடையம்பட்டியில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என தெரிவித்தனர். இதனால் காலை 9 மணிக்கே நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் வரவழைக்கப்பட்டு விழா பந்தலில் அமர வைக்கப்பட்டனர். காலை 10.30மணிக்கு மாவட்ட ஆட்சிதலைவர் வினய் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர்.

ஆனால் திடீரென்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் மேடையிலே வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தார்.மதிய உணவுக்குக் கூட யாரும் நகரவில்லை. முதியவர்கள் உள்பட பயனாளிகளும்; பசியோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு அமைச்சர் வந்து ரூ95 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தாமதமாக வந்த அமைச்சரின் செயல் ஆட்சியர் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் மட்டும் வருகை தருவதாக வந்த தகவலால் மாவட்ட ஆட்சியரை மட்டும் வரவேற்று நுழைவுவாயில் வளைவு ஆர்ச் அமைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

உசிலை சிந்தனியா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image