பெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் சபாஷ் வரவேற்பு.

தந்தைபெரியார் குறித்த சர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து குறிப்பிட்டு பேசினார். அம்மாநாட்டில் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இதனை மறுத்த பெரியார் ஆதரவாளர்கள், ரஜினிகாந்த் உண்மைக்கு புறம்பாக பேசியதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என பெரியார் இயக்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 1971-ல் நடைபெற்ற சம்பவத்துக்கு 2017-ல் வெளிவந்த அவுட்லுக் இதழ் ஆதாரமாக உள்ளது; என் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது; வருத்தம் தெரிவிக்க முடியாது என கூறினார்.
இது பெரியார் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்தின் இப்பேச்சுக்கு பெரியார் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் பாஜக தலைவர்கள் பலரும் ரஜினிகாந்தின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஈ.வெ.ரா குறித்து நான் பேசியது உண்மையே. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: ரஜினிகாந்த். சபாஷ் என பாராட்டியுள்ளார்.

இதேபோல் பாஜக நிர்வாகி கே.டி ராகவன், ரஜினி சொன்னது முற்றிலும் உண்மைதான்.. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என தெரிவித்துள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..