இணையத்தில் வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் அபாரமான நடனம்.!

45 விநாடிகளின் ஓடக்கூடிய வீடியோ ஒன்று  ட்விட்டரில் உமா ஆர்யா என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் விக்கி கவுசலின் 2019 ஆம் ஆண்டு திரைப்படமான யூரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் திரைப்படத்தின் சல்லா பாடலுக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் நடனம் ஆடுகிறார். முழு ஆற்றலுடன், அவர் மிகச்சிறப்பாக நடனம் ஆடுகிறார்.

இந்த வீடியோவுக்கு  இந்திய இராணுவ வீரர் கார்கிலில் நடனமாடி தனது  திறமையை வெளிப்படுத்துகிறார். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத், என்று உமா ஆர்யா பதிவின் தலைப்பில் கூறி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இது ஏற்கனவே  35,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. பதிவில், நெட்டிசன்கள் ராணுவ வீரரின் நடனத்தை பாராட்டி உள்ளனர் மேலும்  அருமை என்று கூறி உள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..