இராமநாதபுரத்தை சேர்ந்த பல்வேறு தனிதிறமை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு உயர் தமிழர் விருது!

இராமநாதபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன், இவருக்கு தன் தன்னம்பிக்கை மூலம் எதிலாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது. அதற்காக மணிகண்டன் தன் ஒற்றைக்காலுடன் சிறு வயது முதலே பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்.

கடந்த 2019 திசம்பர் 13 முதல் ஜனவரி 2 வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை பல்வேறு இயற்கை நலன் சார்ந்த விழிப்புணர்களை ஏற்படுத்தும் விதமாக ஒற்றைக் காலில் மிதிவண்டி ஓட்டி சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்பும் பல முறை இதே போல் மிதிவண்டியை தன் ஒற்றைக்காலில் வெவ்வேறு இடங்களிலிருந்கு ஓட்டிவந்துள்ளார். இவரின் இந்த சாதனையை அறிந்த வில் மெடல்ஸ் நிறுவனம் இவரை நேரில் சந்தித்து வாழ்த்தி உயர் தமிழர் எனும் விருது வழங்கி சிறப்பித்தது!

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image