தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் கைது செய்து மண்டபத்தில் அடைப்பு…

JNU மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மத்திய பாசிச பாஜகவின் ABVP குண்டர்களை கைது செய்யக் கோரி தமிழகம் தழுவியளவில் ஆர்ப்பாட்டம் ஜனவரி 10ஆம் தேதி கம்பம் தபால் நிலையம் முன்பு காலை 10.00 மணியளவில் மாவட்டப் பொருளாளர் தோழர் MVK.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.இப்போராட்டத்தில் AIYFமாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் சு.சரவணபுதியவன், மாவட்டக்குழு உறுப்பினர் P.ஜெகதீஷ் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் MV.கல்யாணசுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் A.பாலு மற்றும் இளைஞர் பெருமன்றத் தோழர்கள். திரளாக கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image