ஆம்பூர் அருகே வயல் வெளியில் குழந்தை பெற்ற பெண்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனின் மனைவி சோனியா (23) இவர் தற்போது கர்பமாக உள்ளார். இன்று 3-ம் தேதி பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நரியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ரகுநாதபுரம் என்ற இடத்தில் சென்ற போது பிரசவ வலி அதிகமானது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் வயல்வெளிக்கு அழைத்து சென்று பிரசவம் பார்த்தனர். பின்பு சோனியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு அரசு மருத்துவமனைக்கு தாயும் சேயும் அழைத்து செல்லப்பட்டனர்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image