தேசிய குடியுரிமைச் சட்டத்தை திரும்பக் பெறக்கோரி மாபெரும் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும், நாடற்றவர்களாக்கும், “தேசிய குடியுரிமைச் சட்டத்தை திரும்பக் பெறக்கோரி “பெரியகுளம் அனைத்து பள்ளி ஜமாத்தார்கள் சார்பில் மாபெரும் கண்டன பேரணி (ம) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியகுளம தென்கரை் வைகை அணை ரோடு சந்திப்பில் இருந்து வடகரை புதிய பேருந்து நிலைய சந்திப்பு வரை கண்டன பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் இசுலாமிய நலக் கூட்டமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் ( ம) உறுப்பினர்கள் , பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக) சரவணக்குமார்,தேனி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் உட்பட மாநில, மாவட்ட, பெரியகுளம் நகர, விடுலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பெரியகுளம் நகர செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட நகர் கழக அ ம முகவினர், பெரியார் திராவிடக் கட்சியைச் சார்ந்த அன்புக்கரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..பின்பு பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலைய சந்திப்பில் கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட சுமார் 1500 க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..