இராமநாதபுரத்தில் விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம் இராமநாதபுரத்தில் நடந்துது. மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். கொள்கை பரப்பு செயலர் மாடசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் வேம்பு ராஜன் முன்னிலை வகித்தனர். விழுப்புரத்தில் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையால் டிச.13ல் தற்கொலை செய்து கொண்ட அருண் குடும்பத்தார் ஆன்மா சாந்தி அடைய மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கிய லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க வேண்டும்,
விஸ்வகர்மா சமுதாயத்திற்கு அரசியலில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. செய்தி பிரிவு செயலாளர் முனியசாமி, பொற்கொல்லர் அணி செயலாளர் ஜெயராமன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், சித்திரவேல், குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..