பெரியபட்டினம் கைபந்து சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு கைபந்து போட்டி..ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன் கோப்பையை தட்டி சென்ற கீழக்கரை JVC மற்றும் திருப்பாலக்குடி வீரர்கள்….

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில், பெரியபட்டினம் கைபந்து சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு கைபந்து போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி, மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பலாக்குடி, பாம்பன், பெரியபட்டினம், அழகன்குளம், புதுவலசை, எமனகொண்டான், பிரப்பான்வலசை, வேதாளை, புதுமடம், ஏர்வாடி, வாலிநோக்கம், இடைகாட்டூர் ஆகிய ஊர்களில் இருந்து அணியினர் கலந்து கொண்டனர்.

இதில் பெரியபட்டினம் – கீழக்கரை சதாம் சகோதரர்கள் விளையாடியதில் பெரியபட்டினம் 30 புளிகள்ளும்,  கீழக்கரை சதாம் சகோதரர்கள் 28 புள்ளிகளும் எடுத்தார்கள். பெரியபட்டினம் மூன்றாம் பரிசை தட்டி சென்றார்கள். கீழக்கரை JVC (ஜதீத் வாலிபால் கிளப்)  மற்றும் திருப்பலாக்குடி மஸ்தான் காலனி அணியினர் மோதியதல் கீழக்கரை JVC 23 புள்ளிகளும் திருப்பலாக்குடி மஸ்தான் காலனி 28 புள்ளிகளும் எடுத்து முதல் பரிசை வெற்றிபெற்றார்கள்.

முதல்பரிசை SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் செ.பைரோஸ்கான் வழங்கினார், இரண்டாம் பரிசை SDPI நகர் தலைவர் அ.முகம்மது மீராசா,  மூன்றாம் பரிசை அஸ்கர் அலி மற்றும் நான்காம் பரிசையும் சேகு ஜலாலுதீன் ஆகியோர் வழங்கினார்.

முதலாம் பரிசுக்கான கோப்பையை அன்வர் அலி, இரண்டாம் கோப்பையை பெரியபட்டினம் கைபந்து சங்க ஒருங்கிணைப்பாளர் ஆபித்,  மூன்றாம் கோப்பையை சேக் ஜலால் மற்றும் நான்காம் கோப்பையை பஹது ராஜாவும் வழங்கினார்கள். இப்போட்டியில் ஆட்ட நாயகன்  கோப்பையை திருப்பலக்குடி இர்சாத்தும்,  தொடர் ஆட்ட நாயகன் கோப்பையை கீழக்கரை JVC மஹரூசும் தட்டி சென்றார்கள். இப்போட்டிகான ஏற்பாடுகளை பெரியபட்டினம் கைபந்து சங்கம் செய்து இருந்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image