பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவலர்களின் கொடி அணிவகுப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் டிசம்பர்.6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு காவலர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு கடையநல்லூரில் பல்லேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த அமைப்புகளுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதைப் போக்கும் வகையில் புளியங்குடி டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பிருந்து புறப்பட்டு கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சேந்தமரம் சாலை, இக்பால் நகர், கலந்தர் மஸ்தான் தெரு அட்டக்குளம் தெரு வழியாக சென்று மணிக்கூண்டில் வந்து முடிவடைந்தது. போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர்கள் கடையநல்லூர் கோவிந்தன், புளியங்குடி அலெக்ஸ்,சப் இன்ஸ்பெக்டர்கள் கடையநல்லூர் விஜய்குமார் , சொக்கம்ட்டி வேல்பாண்டி புளியங்குடி முகைதீன்பிச்சை, சேந்தமரம் தினேஷ்பாபு மற்றும் பல காவலர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..