உசிலம்பட்டியில் நகராட்சியின் மூலம் இயற்கை உரம். விவசாயிகளுக்கு அழைப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் தினமும் 11ஆயிரம் டன் குப்பைகள் குவிந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என தரம் பிரித்து மட்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், இலை,செடி, கொடிகள் போன்றவைகளிலிருந்நு கிடைக்கும் குப்பைகளை இயந்திரம் அரைத்து மட்க வைத்து இயற்கை உரமாக மாற்றி தமிழக அரசின் உத்தரவு படி விவசாயிகளுக்கு 1 டன் இயற்கை உரம் 500 ரூ விற்பனை செய்யப்படுகின்றனர்.

இதனால் இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள், பொதுமக்கள், உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு அழகேஸ்வரியிடம் அதற்கான மனுவினை வாங்கி பெயர் மற்றும் விலாசம் அடங்கிய மனுவினை நிரப்பி உரத்தினை பெற்றுகொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், சரவணபிரபு, துப்புரவு பணி மேற்பார்வை தனுஷ்கொடி, பொறுப்பாளர் பாண்டி, நந்தினி ஆகியோர்களிடம் கூடுதல் தகவல் பெறலாம்.. தொடா்புக்கு -9790119364,   9842370560 ,  9843268867  9943917767.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image