நெல்லையில் 52-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மகளிர் தின விழா-மாவட்ட நீதிபதி பங்கேற்பு

52-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் திரு.அ.மரியசூசை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் திருமதி இரா வயலட் நூலக கண்காணிப்பாளர் திரு.சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி இந்திராணி கலந்து கொண்டு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். புனித இன்னாசியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் நிர்மலாதேவி உரையாற்றினார். தொடர்ந்து பெண்ணிற்கு பெரிதும் தேவை அறிவா? அன்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் செயல்பட்டார். அன்பே என்று பேராசிரியர் ஜெயமேரி கல்வியல் கல்லூரி மாணவிகள் பிரான்யா, முத்து விநோதினி ஆகியோரும், அறிவு என்று பேராசிரியை அனுசுயா கல்லூரி மாணவிகள் ரோசலின் செபஸ்டின், ஸ்வீட்டி ஆகிேயாரும் பேசினர்.

அன்பு சார்ந்த அறிவே பெண்ணிற்கு பெரிதும் தேவை என்று தீர்ப்பு கூறினார் விழாவில் பேராசிரியர் உஷாதேவி மயூரி டி.விஆறுமுக நயினார் கவிஞர் மணிமொழி செல்வன்,தேசிய வாசிப்பு இயக்க தலைவர் திரு. தம்பான் செயலாளர் முனைவர் சரவணகுமார் நூலகர்கள், கண்ணு பிள்ளை, சி.மகாலட்சுமி , ஜெயமங்களா, சீனிவாசன், மாரியப்பன் வனராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் இரா.முத்துலெட்சுமி நன்றி கூறினார்.இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image