இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுமி சாலை விபத்தில் பலி.

13 வயது சிறுமி வலையங்குளம் அருகே எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார் .அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவர் மீது லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே சிறுமி பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் இறந்த சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்டனர் .சம்பவ இடத்துக்கு விரைந்த பெருங்குடி காவல்துறையினர் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சிறுமியிடம் வாகனம் கொடுத்தது தவறு எனவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைதெ் தொடர்ந்து மறியலைக் கைவிட்டனா். பின் காவல்துறையினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..