நெல்லையில் அபாயகரமாக காட்சியளிக்கும் சாலை-துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்.!

நெல்லையில் அபாயகரமாக காட்சியளிக்கும் சாலை-துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்.!

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் பாலாஜி அவன்யூ இரண்டாவது கீழத்தெருவில் உள்ள சாலையில் அபாயகரமான குழி ஏற்பட்டுள்ளது.

மேலும் அருகே உள்ள பாதாளச்சாக்கடை குழாய் வரைக்கும் உடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் நிலை மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்கிறது.

இந்த வழியே சாலையில் செல்லும் வாகனங்கள், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் இன்றைய தேதி (16/11/2019)வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள அபாய குழி மற்றும் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைந்து சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image