இராமநாதபுரத்தில், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு கணவர் தப்பியோட்டம். கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சேதுபாண்டியன். இவருக்கும் ஜெயராணி 45, என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தை இல்லை காரணத்தால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சேதுபாண்டியன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயராணி வசிக்கும் வீட்டிற்கு சேதுபாண்டியன் இன்று காலை சென்றார். வீட்டை காலி செய்யுமாறு ஜெயராணியிடம், சேது பாண்டியன் தகராறு செய்தார். வீட்டை விட்டு வெளியேற முடியாது என ஜெயராணி பிடிவாதம் செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நேரம் தகராறு நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த சேதுபாண்டியன், ஜெயராணியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடினார். உயிருக்கு போராடிய ஜெயராணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து சேதுபாண்டியனை தேடி வருகின்றனர். தலைமறைவான சேதுபாண்டியனை கொலை வழக்கில் கைது செய்யக்கோரி, ஜெயராணியின் உடலை வாங்க மறுத்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..