நிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ .விடம் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , முசுவானூத்து ஊராட்சியில் உள்ள ஆண்டிபட்டி |கல் கோட்டை ஆகிய கிராமங்களுக்கு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 7 லட்சம் மதிப்பில் நாடகமேடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நாடகமேடை கட்டும் பணிக்காக பூமிபூஜை விழா நடைபெற்றது.. விழாவிற்கு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் தலைமை தாங்கினார்.. நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். இரு கிராமங்களுக்கும் பூஜை விழா நடைபெற்றது..அப்போது கல் கோட்டையில் நடந்த பூமி பூஜையில் கலந்துகொண்ட பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் குடிநீரில் கலந்து வருகிறது. எனவே அதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருக்கிறது முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சில பெண்கள் 100 நாள் வேலைவாய்ப்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல் இங்குமங்குமாக அலைய விடுகிறார்கள் .100 நாள் வேலையை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் ஒரு நாளைக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களிடம் தெரிவித்தார்..இவ்விழாவில் முன்னாள் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சேகர், நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன், அதிமுக ஊராட்சி கழக செயலாளர் ரவிச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..