மழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரண்யா,சண்முகம் ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார்.

மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை செவிலியர் ஜோசப் மேரி , மருந்தாளுநர்கள் கனிமொழி,சிவக்குமார் ,உதவியாளர் ஷாஜஹான்,வாகன ஓட்டுநர் தேவதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக ஆசிரியைமுத்துலெட்சுமி நன்றி கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..