திருமணத்திற்கு மறுத்த பள்ளிக்கூட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்.

திருமணத்திற்கு மறுத்த பள்ளிக்கூட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்.அண்ணன் போலிசில் சரண்.தம்பி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனான்.மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. தனலெட்சுமி தம்பதியினர்.இவர்கள் மகள் சந்தியா (16).; இவர் மதுரை தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்பாண்டியின் சொந்த ஊரான பேரையூர் அருகேயுள்ள ஓணாப்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதாற்காக தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். திருவிழா முடிந்ததும் பால்பாண்டி தன்னுடைய மகளான சந்தியாவை தனது பாட்டி செல்லம்மாள் வீட்டில் தங்கவிட்டு பால்பாண்டி மீண்டும் மதுரை சென்றார்.

இந்நிலையில் கடந்த   ஞாயிற்றுக்கிழமை சந்தியா ஊருக்கு அருகே உள்ளதோட்டத்தில்குளிப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.ஆனால் இரவாகியும் வீட்டிற்கு வரவில்லை. உடனே உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தபோது தோட்டபகுதியில் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சேடபட்டி போலீசாhருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு பிரெத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் பள்ளிமாணவி சந்தியாவின் கொலைக்காண காரணம் குறித்து விசாரனையை போலீசார் தொடங்கினர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அம்மாசி மகன் மாதவன்(24) சேடபட்டி போலிசில் சரணடைந்தான். அப்போது முதற்கட்ட விசாரணையில் சந்தியாவை கடந்த 2வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்காததால் சந்தியா குளிக்க சென்றபோது பின்தொடர்ந்து தலையில் கல்லால்தாக்கி கொலைசெய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதனை நம்பாத போலிசார் மேலும் விசாரணையை தொடங்கினர்.

அப்போது மாதவன் சந்தியாவை ஆள்இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார். உடன் மாதவன் தம்பி மதுவும் சென்றுள்ளார்.இருவரும் சேர்ந்து சந்தியாவை பாலியியல் பலாத்காரம் செய்து விட்டு தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொன்று விட்டு உடலை புதருக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.சேடபட்டி போலிசார் இருவர் மீதும் போக்சோ-கற்பழிப்பு-கொலை வழக்கு பதிவு செய்து மாதவன் தம்பி மதுவை (24) தேடி வந்தனர். போலிசார் தேடுவது தெரிந்தது மது உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் குமார் மதுவை ஒரு நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.இதனையடுத்து போலிசார் மதுவை விசாரணைக்காக பேரையூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இச்சம்பவம் உசிலம்பட்டிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image