நிலக்கோட்டையில் பல்வேறு கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலின் போது மத்திய ,மாநில அரசுகள் உறுதியளித்த படி அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என கூறி நாங்குநேரியில் பல்வேறு கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி இடைத்தேர்தலை புறக்கணித்தும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனையொட்டி அத்தொகுதி மக்களுக்கு ஆதரவாகவும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கூறியும் தமிழகமெங்கும் பல்வேறு கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதை கோரிக்கையை வலியுறுத்தி நிலக்கோட்டை பகுதியில் குளத்து பட்டி,இந்திராநகர், உச்சணம்பட்டி, கல்லடிப்பட்டி, நூத்த லாபுரம், குரும்பபட்டி, சிறுநாயக்கன்பட்டி, கொங்கர்குலம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..