தஞ்சை மீனவர் ஏழு பேருக்கு அக்.24 வரை சிறை காவல். இலங்கை நீதிமன்றம் உத்தரவு..

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கள்ளிவயல்தோட்டம் , மல்லிபட்டினம் மீனவர்கள் நேற்று (09.10.19) காலை மீன்பிடிக்கச் சென்றனர். மக்கான் முகமது என்பவரது விசைப்படகில் கீச்சாங்குப்பம் உதயா, இலக்கியன், கனகராஜ் உள்பட 4 பேர், வெங்கடேஷ் என்பவரது படகில் ரத்தினமணி, முருகன், சரவணன் ஆகியோர் நெடுந்தீவு அருகே இன்று10.10.19 அதிகாலைமீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் | இரண்டு படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடித்தனர் எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்தது காங்கேசன்துறை கடற்படை முகாம் கொண்டு சென்றனர். அங்கு விசாரணைக்கு பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சபேஷன் மீனவர் 7 பேரையும் அக். 24ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து 7 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply