Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தற்போது வார்டு வரையறுவில் ஏற்ப்பட்டுள்ள குளறுபடி….பொதுமக்கள் புகார் செய்ய சமூக நல அமைப்புகள் வேண்டுகோள்..

கீழக்கரையில் தற்போது வார்டு வரையறுவில் ஏற்ப்பட்டுள்ள குளறுபடி….பொதுமக்கள் புகார் செய்ய சமூக நல அமைப்புகள் வேண்டுகோள்..

by ஆசிரியர்

தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்க சாத்தியக்கூறுகள் தென்படுகிறது.இதனால் தமிழக முழுவதும் வாக்காளர் வரையரை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த அரசியல் கட்சியினர் முன் கீழக்கரை நகராட்சி(பொறுப்பு)ஆணையரும், கீழக்கரை தேர்தல் அதிகாரியுமான தனலட்சுமி வெளியிட்டார். கீழக்கரையில் வெளியிடப்பட்ட வாக்காளர் வரையரை பட்டியலில் அதிகமாக குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக மக்கள் நல பாதுகாப்புகழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பல சமூக நல அமைப்புகள் பொதுமக்களிடம் தங்கள் குறைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல மனு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கீழக்கரை நகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் வரைவு பட்டியல் எந்த வித கள ஆய்வும் செய்யாமல் கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் தயார் செய்து வெளியிட்டு உள்ளனர். இதை அரசின் கவனத்திற்கும், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு செல்ல பொதுமக்கள், சமூக மற்றும் சமுதாய அமைப்புகள் முன் வரவேண்டும்.

இது சம்பந்தமாக கீழே உள்ற மூன்று மனுக்களை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. . சமூக ஆர்வலர்கள் கீழ்க்கண்ட இரண்டு மின் அஞ்சல் முகவரிக்கும் இந்த மூன்று மனுக்களையும் தன் சொந்த ஜ டி யில் அனுப்ப கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மனு எண்:-1

அனுப்புனர் < தேதி >

< பெயர் > < தந்தை பெயர் > < முகவரி > < அலை பேசி எண் >

பெறுநர்

மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராமநாதபுரம் மாவட்டம்.

ஐயா,

கடந்த 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட வார்டு மறு வரையறை பட்டியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் பட்டியலை, தயார் செய்த நகராட்சி அலுவலர்கள் தப்பும் தவறுமாக பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளனர். பல வார்டுகள் முறையற்ற தன்மையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வார்டுகளும் குழப்பத்தின் நுழைவு வாயிலாக மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளுக்கு முரணாக, முறையற்ற தன்மையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் பட்டியலால் 21 வார்டு பகுதி மக்களும் கடும் குழப்பத்தில் அல்லல்படும் சூழலை உருவாக்கியுள்ளனர்.

வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச் சாவடியை தேடி அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், கீழக்கரை நகராட்சியின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதமும் குறையும் அபாயமுள்ளது.

ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப அங்கத்தினரின் வாக்குகள் சின்னாபின்னமாக சிதறடிக்கப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் குடியிருக்கும் தந்தை ஒரு வார்டிலும், தாய் ஒரு வார்டிலும், பிள்ளைகள் வேறொரு வார்டிலும் இணைக்கப்பட்டு குதறப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமானால் பொதுமக்களின் இயல்பான வாக்குரிமை சதவீதங்கள் துண்டாடப்படும் சூழல் உருவாகிவிடும்.

இந்த குளறுபடியான பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் கைவிட வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடமும், நகராட்சிகள் நிர்வாக இயக்ககத்திடமும் முறையிட்டுள்ளோம். மேலும் மதுரையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 08.02.2018 அன்று பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பாக நேரில் கலந்து கொண்டு குளறுபடியான வார்டு மறு வரையறை பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வித முன்னறிவிப்புமின்றி குளறுபடியான வார்டு மறுவரையறை பட்டியல் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே மரியாதைக்குரிய மாவட்ட தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரியான தாங்கள் எனது இந்த மனுவினை உரிய பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

மனு எண்:-2 அனுப்புனர் < தேதி >

< பெயர் > < தந்தை பெயர் > < முகவரி > < அலை பேசி எண் >

பெறுநர்

மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராமநாதபுரம் மாவட்டம்.

ஐயா,

கீழக்கரை நகராட்சியில், நகராட்சி ஆணையாளர் பணியிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றது. இங்கு நிரந்தர நகராட்சி ஆணையாளர் இல்லாமல் இருப்பதால், நகராட்சி மேலாளர் திருமதி தனலெட்சுமி, பொறுப்பு ஆணையராக உள்ளதோடு, உள்ளாட்சி சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கூடுதலாக நகராட்சி தேர்தல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்க உள்ளார். இப்படி தகுதிக்கு மீறி ஒரே நபர் நான்கைந்து பொறுப்புகளில் உள்ளார். இதனால் நகராட்சி நிர்வாகம் தட்டுத் தடுமாறி நிலை குலைந்து போயுள்ளது. இதனால் நகராட்சி மேலாளர் செய்ய வேண்டிய அலுவலக பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு, நகராட்சி பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன் அலுவலக பணிகளும் முடங்கி இருக்கின்றது.

மேலும் கீழக்கரை நகராட்சியில் நிரந்தர ஆணையர் பணியில் இல்லாததால் அலுவலக ஊழியர்கள் தங்கள் பணிகளில் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக பல்வேறு உள்ளூர் சமூக நல அமைப்பினர் முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்தில் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி முயன்று வருகின்றனர்.

இந்த மனுக்களை பதில் அளித்துள்ள தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குனரகம், கீழக்கரை நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என்று மட்டும் தொடர்ச்சியாக பதில் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய தேதி வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே கீழக்கரை நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, தகுதிமிக்க ‘நகராட்சி ஆணையாளர்’ பணியிடம் முறையாக நிரப்பப்பட்டால் மட்டுமே ஜனநாயக வழியில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்தேறும்.

ஆகவே மரியாதைக்குரிய மாவட்ட தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரியான தாங்கள் எனது இந்த மனுவினை உரிய பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

மனு எண்:-3

அனுப்புனர் < தேதி >

< பெயர் > < தந்தை பெயர் > < முகவரி > < அலை பேசி எண் >

பெறுநர்

மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இராமநாதபுரம் மாவட்டம்.

ஐயா,

கீழக்கரை நகராட்சியில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ஒரு சிலர் மீது வரி வசூல் நிதி கையாடல்கள், நகராட்சி ஆணையரின் கையெழுத்தை மோசடி செய்யும் நோக்கில் தவறாக பயன்படுத்தியது, இலஞ்ச புகார் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு துறை அலுவலகம் மற்றும் நகராட்சிகள் மண்டல (மதுரை) அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்லாது இன்றைய தேதி வரை, இவர்கள் பொதுமக்களிடம் இலஞ்சம் பெற்ற பின்னர் மட்டுமே உரிய அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்தில் இருக்கின்றனர்.

இது சம்பந்தமாக இந்த இளநிலை உதவியாளர்களை பணியிட மாறுதல் செய்யக் கோரி, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக தமிழக நகராட்சிகள் நிர்வாக ஆணையத்திற்கு பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளது. ஆனால் இன்றைய தேதி வரை இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கீழக்கரை நகராட்சியிலேயே தொடர்ந்து பணி செய்து வருகின்றனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது நகராட்சி உதவி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளே, எதிர்வரும் 2019 உள்ளாட்சி தேர்தலிலும் உதவி தேர்தல் அலுவலராக மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் கீழக்கரை நகராட்சியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக வழியில் நடைபெறுமா என அஞ்சத் தோன்றுகிறது.

ஆகவே மரியாதைக்குரிய மாவட்ட தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரியான தாங்கள் எனது இந்த மனுவினை உரிய பரிசீலனை செய்து கீழக்கரை நகராட்சியில் இளநிலை உதவியாளர்களாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியிலிருக்கும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, .ஜனநாயக வழியில் உள்ளாட்சி தேர்தல் நடந்தேற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

மனுக்கள் அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி:-

*Email to :*

*[email protected]*

*Cc to :*

*[email protected]*

இது சம்பந்தமாக மேலும் தகவல்கள் தேவை என்றால் கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடர்ப்பு கொள்ளலாம். 9443358305 9677640305 979174 1708

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!