பாலக்கோடு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை. உதவி கலெக்டர் விசாரணை

பாலக்கோடு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார்.தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியைச்சேர்ந்தவர்  தூருவாசன்.இவருடைய மகன் விக்ரம். இவர் நைஜீரியா நாட்டில் சாப்ட்வேர்  என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி  மகள் வரலட்சுமி 22). இவருக்கும் விக்ரமுக்கும் கடந்த 1ஆண்டுக்கு முன்பு திருமணம் முடிந்த பின்னர் விக்ரம்.மனைவியை தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு நைஜீரியா சென்ர விட்டார். இளம் பெண் வரலட்சுமி மாமனார். மாமியாருடன் வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்து விக்ரம் 4 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து சென்றதால் இளம்பெண் வரலட்சுமி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  மாலை தனது படுக்கை அறைக்கு சென்ற வரலட்சுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது மின் விசிறியில் வரலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வரலட்சுமியின் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வரலட்சுமியின் தந்தை முனுசாமி மகேந்திர மங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார். இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image