கோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்

கோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கான இலவச  அக்குபஞ்சர் பயிற்சி முகாம் இன்று 21.09.19 தொடங்கியது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரஸ்வதி மஹால் மேன்சனில் இருக்கும் ஸ்ரீரத்னா மாற்றுமுறை மருத்துவமனையில் காலை 10 மணிக்கு பயிற்சி முகாம் தொடங்கியது.இந்திய இயற்கை மருத்துவக் கவுன்சில் (INTC) சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான இலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம் வகுப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா அவர்கள் தொடங்கி வைத்தார். “மருந்தில்லா மருத்துவமாய்” இருக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை முறை குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த பயிற்சி வகுப்பில் இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் (IRTC) அக்குபஞ்சர் மருத்துவர்கள் பாம்பலம்மாள், ரமா, சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு அக்குபஞ்சர் மருத்துவம் முறை குறித்தும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் விரிவான வகுப்பு எடுத்தனர்.பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். நிறைவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ் குமார் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..