Home செய்திகள் மல்லிபட்டினம் கடலில் மூழ்கிய மீனவர்களில் இருவர் தொடர் மாயம் மீட்பு பணி தொய்வால் போராட்டம்

மல்லிபட்டினம் கடலில் மூழ்கிய மீனவர்களில் இருவர் தொடர் மாயம் மீட்பு பணி தொய்வால் போராட்டம்

by mohan

இராமேஸ்வரம் அருகே நடராஜபுரம் மீனவர் 10 பேர் ஆக.29ல் கடலூர் சென்று , அங்கு வாங்கிய பைபர் படகு மூலம் கடலூரில் இருந்து இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்தனர். மல்லிபட்டினம் நடுக் கடலில் நிலவிய திடீர் சூறைகாற்றால் படகு மூழ்கி 10 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர். இதில காளிதாஸ், செந்தில்வேல் ஆகியோர் பிளாஸ்டிக் கேனை பிடித்துக் கொண்டு கரை சேர்ந்தனர்.  19 ஆகியோர் மாயமாகினர். மீட்பு பணியில் இந்திய கடலோர காவல் படை, உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தக்கோரி மாயமான மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாயமான 8 மீனவரில் முனீஸ்வரன், தரைக்குடியான், ரஞ்சித் குமார், முனியசாமி ஆகியோர் செப்.5ல் பத்திரமாக கரை சேர்ந்தனர்.  இந்நிலையில் இருவர் உடல் அதிராம்பட்டினத்தில் இன்று07.09.19 கரை ஒதுங்கியது. எஞ்சிய இரண்டு மீனவரின் நிலை குறித்து கவலை அடைந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை தேடும் முயற்சியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் மாயமான இரண்டு மீனவர் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆறுதல் கூறி, அரசு மேற்கொண்டுள்ள தொடர் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.20லட்சம் பெற்று தர வேண்டும்,கணவரை இழந்த ஜெயாவிற்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் . உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகள் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும்,மல்லிப்பட்டின த்தில் இருந்து மீனவர் உடல்களை அரசு செலவில் நடராஜபுரம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. எளிதில் நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகளைமாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஏற்றுக்கொண்டார். நிவாரண உதவி தொகை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று துரிதமாக கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்தார்.இதையடுத்து மீனவர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!