Home செய்திகள் திருவண்ணாமலை நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

திருவண்ணாமலை நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

by mohan

திருவண்ணாமலை நகரில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மலையில் இருந்து காலை சுமார் 10 மணி அளவிலும் , காந்தி சிலையில் இருந்து ஹிந்து முன்னணியின் சார்பில் மாலை 3 மணி அளவிலும் ஊர்வலம் புறப்பட்டது.இதில் ஏராளமான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்களும் கலந்துகொண்டு விநாயகர் சிலைகளைதாமரைக்குளத்தில்கரைத்தனர்.திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தனித்தனியாக எடுத்துச் செல்லப்பட்டு தாமரைக்குளத்தில் கொண்டு சென்று விஜர்சனம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை தேனி மலையிலிருந்து நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை தாமரை குளத்தில் கரைத்தனர்.இதில் ஏராளமான சிலைகள் அணிவகுத்து வந்தன.மேலும் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியில் உள்ள ஏராளமான ஏரிகளிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.விநாயகர் சிலைகள் அணிவகுத்துச் சென்றபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் தலைமையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்திருந்தனர். பிஜேபி நகரத் தலைவர் செந்தில்முருகன், சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர், மாவட்ட துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, எஸ்சி அணி மாவட்ட தலைவர் பட்டறை முருகேசன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.ஹிந்து முன்னணியைச் சேர்ந்த நகர பொதுச்செயலாளர் துரைராஜ், மாவட்டச் செயலாளர் செந்தில், மாவட்டச் செயலாளர் அருண்குமார், சிறப்பு அழைப்பாளர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!