வேலூர் போலீசார் அதிரடி. ரூ3 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் மீட்பு..

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கென்னடி இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவரது மகன் கோகுல்காட்பாடி அடுத்த வடுகந் தாங்கலில் உள்ள NTTF தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வருகின்றார். கோகுலுடன் படிக்கும் 4 மாணவர்கள் ஒன்று சேர்ந்து கோகுலை கடத்தி ரூ 3 கோடி கேட்டு போனில் மிரட்டினர். இதுகுறித்து தகவல் பெற்ற எஸ், பி.பர்வேஷ் குமார் 3 தனிப்படை அமைத்து தேடினார்.காட்பாடி வள்ளிமலை சாலையில் ரூ 5 லட்சம் கொடுக்கும் படி அவர்கள் கேட்டனர்.தகவல் பெற்றதனிப்படையினர் டம்மி வெள்ளை பேப்பர் வைத்து கடத்தல் நபர்களிடம் கொடுக்க சொல்லி சுற்றி வளைத்து கைது செய்து கோகுலை மீட்டனர்.கடத்தலில் ஈடுப்பட்ட சக மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர்.தகவல் பெற்று சில மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக செயல்பட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது கடத்தல் நாடகமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal