ராமநாதபுரம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம், லாந்தை கிராமங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:ஓஎன்ஜிசி நிறுவனம் சமுதாய வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ரூ.96.11லட்சம் மதிப்பில் எஸ்.பி.பட்டினம், வெண்ணத்தூர், பொதிகுளம், கொழுந்துரை, ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி, லாந்தை கிராமங்களில்உவர் நீரை நன்னீராக்கும் நிலையம் அமைக்க முன்வந்தது. அதன்படி, ரெகுநாதபுரம், லாந்தைகிராமங்களில் அமைக்கப்பட்ட நன்னீர் நிலையங் கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.அனைத்து களிலும் ஊராட்சிகள் மூலம் ஷெட், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத்தர ரூ.6 லட்சமும், ஒஎன்ஜிசி நிறுவனம் மூலம் ரூ.9.5 லட்சம் என ரூ.15.5 லட்சம் மதிப்பில் மக்கள்பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் கார்டு போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 1 ஸ்வைப்பிற்கு 20 லிட்டர் குடிநீர் வழங்க வெகுவிரைவில் ஏற்பாடு செய்யப்படும். ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 10 நிதி ஆண்டுகளாக ரூ.4.85 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2.1 கோடி மதிப்பிலான பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம வாரியாக ரூ.14.60 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படுகின்றன என்றார். ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் எஸ்.எஸ்.சி.பார்த்திபன், பொது மேலாளர் (சென்னை) என்.மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி, மூத்த விஞ்ஞானி க.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image