ராஜஸ்தான் – கிருஷ்ண ஜெயந்தி விழா

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (23.08.2019 ம் தேதி வெள்ளிகிழமையன்று கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவினை பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் சிறப்பாக கொண்டாடினர்.இதில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு கொண்டாடுவர்.

இதே போல் வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (25.08.19) ஞாயிற்றுகிழமை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் சாலை பகுதிகள், கோயில்கள் என பல்வேறு பகுதிகள் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அழகாக காட்சியளித்து வருகிறது. முன்னதாக கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் ,பக்கர்கள் கிருஷ்ணனை தரிசனம் செய்தனர்.

பொதுவாக வட மாநிலங்களில் தான் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறும். ஆனால் தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவதாக தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..