நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்காெலை முயற்சி-தடுத்து நிறுத்தி காப்பாற்றிய போலிசார் மற்றும் செய்தியாளர்கள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.08.19 திங்கள் கிழமை நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடப்பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்த ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென தாங்கள் வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து விஷத்தை குடித்து தற்காெலை செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது சம்பவ இடத்தில் இருந்த போலீசார் மற்றும் செய்தி சேகரிக்க அங்கு நின்று கொண்டிருந்த தினமணி செய்தியாளர் பெருமாள்,சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் ஆகியோர் உடனே தடுத்து நிறுத்தி அவரையும் அவரது குடும்பத்தினர்களையும் காப்பாற்றினர்.தற்கொலைக்கு முயன்ற முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் இடப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்   அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..