திண்டுக்கல்லில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் போராட்டம்

திண்டுக்கல்லில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட்டுமான நல வாரியத்தை போல அனைத்து அமைப்பு சாரா நலவாரிய தொழிலாளர்களுக்கும் விபத்து மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், புதிய பதிவிற்கு ஆய்வு என்ற பெயரில் நலவாரிய அட்டை வழங்க தாமதம் செய்யாதே!வாரிய அலுவலகத்தில் போதிய ஊழியர் களை நியமனம் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு தொழிர்சங்கம் சார்பாக இன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நல வாரிய அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..