கன்னியாகுமரி – குழந்தையை கடத்தியவா் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்தைவிளையை சேர்ந்தவர் சடையன் . மனைவி தேவி. இவர்களுடைய குழந்தை வீரம்மாள் (3) . 12.08.2019 அன்று இவர்கள் நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராஜி(28) என்ற பெண் தூங்கி கொண்டிருந்த குழந்தை வீரம்மாளை கடத்தி சென்று விட்டார். அதன்பின் சடையன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீநாத்  கோட்டாறு உதவி ஆய்வாளர் .சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தையை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தையை வள்ளியூரில் வைத்து மீட்டு குற்றவாளி ராஜியை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். இச்செயலை குழந்தையின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

 செய்தி வி காளமேகம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..