Home செய்திகள் இராமேஸ்வரம் கோயில் ஆடி தபசு திருக்கல்யாண மாலை மாற்றுதல் அம்பாள் உலா

இராமேஸ்வரம் கோயில் ஆடி தபசு திருக்கல்யாண மாலை மாற்றுதல் அம்பாள் உலா

by mohan

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா ஜூலை 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களாக தினமும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. காலை, மாலை வேளைகளில் வீதி உலா நடைபெற்றது.திருவிழாவின் 11ஆம் நாளான இன்று பகல் 11 மணி அளவில் சுவாமி தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். மதியம் 2 மணியளவில் தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதசுவாமிக்கும் , பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் நாளை ஆக.5 இரவு 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஆர்., 6, 7 இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் , ஆக., 8 மாலை 4:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி- அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளல் வைபவம் நடைபெற உள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!