கீழக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக மதுபான கடை முற்றுகை..

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூராக இயங்கி வந்த மதுபான கடையை பல முறை கோரிக்கைகள் மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் கடையை அகற்றாததால் ,அறிவித்தபடி நாம்தமிழர்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இந்த முற்றுகை ஆர்பாட்டம் 3மணி நேரம் நீடித்தது.பின்னர் அனைவரும் காவல்துறையால் கைது செய்யபட்டனர்.

இதில் மண்டல செயலாளர் கு.பத்மநாபன், தொகுதி செயலாளர் குமரன்,மாவட்ட. தலைவர் நாகூர்கனி கீழக்கரை நகர் செயலாளர் ஹபில் ரஹ்மான் மேலும் பல மாவட்டம் ,நகரம்,ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்தமதுபானகடையை விரைவில் அகற்றவில்லை என்றால் அடுத்து மாபெரும் மக்கள் போராட்டம் நாம்தமிழர்கட்சி சார்பாக முன்னெடுக்கபடும் என எச்சரிக்கை செய்தனர்

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..