சாலை விதிகளை அறிந்து, விழிப்புடன் செயல்படவேண்டும்.தூத்துக்குடி மாவட்ட S.P. அருண் பாலகோபாலன் அறிவுறை

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்அவர் பேசுகையில் “அனைவரும் சாலை விதிகளை அறிந்து, அவற்றை மதித்து விழிப்புடன் செயல்படவேண்டும்,இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் , அதே போன்று பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும்போது உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்,ஒரு நபர் விபத்தில் உயிரிழக்கும்போது, அவர் மட்டுமல்லாமல் அந்த குடும்பமே பெரிய பாதிப்புக்குள்ளாகின்றது,நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிந்தால்தான் விபத்து நேரத்தில் வாகனத்தின் ஏர் பலூன் வெளிப்பட்டு உயிரிழப்பை தவிர்க்கும் ,18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எந்த வாகனங்களும் ஓட்டக் கூடாது , 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் லைசென்ஸ் பெற்ற பிறகே வாகனம் ஓட்ட வேண்டும் , ஹெல்மெட் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து செல்வதன் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் நண்பர்கள்,குடும்பத்தில் உள்ளவர்கள், உங்கள் அருகில் உள்ளவர்கள் அனைவருக்கும் நீங்கள் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என பேசினார்.இக் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி லூசியா ரோஸ் மற்றும் துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஷிபானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சாலை போக்குவரத்து தலைமை காப்பாளர் ஜட்சன் சாலை பாதுகாப்பு நெறிமுறைகளை எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் தூய மரியன்னை கல்லூரியின் சுமார் 500 மாணவிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..