4 வயது வடநாட்டு குழந்தை கொலை வழக்கை நியாயமாக விசாரிக்க வெல்ஃபேர் கட்சி மற்றும் சாதி ஒழிப்பு விடுதலை முன்னனியினர் கோரிக்கை..

சென்னை: பூந்தமல்லி அருகில் உள்ளது ஆண்டர்சன் போட்டை அங்கு இருக்கக்கூடிய ஒரு செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யக்கூடிய ஒடிசாவை செர்ந்த அமீத்., அவந்திகா தம்பதிகளின் 4 வயது பெண் குழந்தை திருவேனி. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14.7.2019 சூளையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாலை 3 மணி முதல் காணாமல் போயுள்ளது. குழந்தை காணாமல் போனதை தாமதமாக அறிந்து கொண்ட பெற்றோர்கள். சூலை, அருகில் ஓடக்கூடிய ஆறு என அனைத்து பகுதியிலும் தேடியும் கிடைக்கவில்லை..

இந்த நிலையில்  15.4.2019 காலை 6.00 க்கு சூலையின் மதில் சூவருக்கு பின்புறம் அந்த பெண் குழந்தை சடலமாக கிடைத்துள்ளது. பிரேதத்தை கைப்பற்றிய B7 காவல்துறை உடல்கூறு ஆய்வுக்கு பிறகு அன்று மாலையே குழந்தையின் சடலத்தை பெற்றோர்கள் இடத்தில் ஒப்படைத்து அடக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் B7 வெள்ளவேடு காவல் துறை CrPC174 சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.  விசாரனையில் சூளைக்கு அருகில் இருக்கக்கூடிய ஸ்ரீராம் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில் அதே சூளையில் வேலை செய்யக் கூடிய மற்றொரு தொழிலாளி அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. செய்தியை அறிந்தத வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது கவுஸ் மற்றும் வழக்கறிஞர் அஹமது பாசில், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் ஜெய நேசன் ஆகியோர் காவல் நிலையம் சென்று வழக்கு குறித்து விசாரித்து,  பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இது தொடர்பாக வெல்ஃபேர் கட்சி மற்றும் சாதி ஒழிப்பு விடுதலை முன்னனியினர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் வடமாநிலத்தவர் தானே என்கின்ற ரீதியில் காவல்துறை இந்த விஷயத்தை அனுகாமல் மனிதாபிமான அடிப்படையில் வழக்கை துரிதமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.

சமீபகாலமாக தமிழகத்தில் இத்தகைய கொடும் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகவும் கவலையளிக்கக் கூடிய செயலாக இருக்கிறது. காவல்துறை வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து வேலை செய்யக் கூடியவர்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து பணி செய்யக்கூடிய இத்தகைய தொழிலாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பும் உயிர் பாதுகாப்பும் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…