சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்.

நாமக்கல், சிதம்பரம், செஞ்சி, குன்னூர், அரியலூர், செக்கானூரணி, ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையின்போது ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 80 ஆயிரம் ரூபாய்.தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் 70 ஆயிரம் ரூபாய் சிக்கியது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சோதனையில் 43 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..