சொத்து பிரச்சனையில் மூதாட்டி மீது தாக்குதல்.

திண்டுக்கல் மாவட்டம்,ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய பகுதியில், மாணிக்கவாசகபுரத்தில் சொத்து பிரச்சனையில்,  இரவு  வீட்டிலிருந்த ராமுத்தாய் 63 என்பவரை ராமசாமி, மருதராஜ், ஆகியோர் தூண்டுதலின் பேரில் ஜெயலட்சுமி,மல்லிகா ஆகியோர் சேர்ந்து, கம்பிகள் கட்டைகள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கொலை வெறியோடு தாக்கியுள்ளனர், தலையில் பலத்த காயமும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு, அதிக அளவில் ரத்தக் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமுத்தாய் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர்கள் மீது ரெட்டியார் சத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பாதிக்கப்பட்ட ராமுத்தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.!

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..