மண்டபத்தில் அடிக்கடி மின்வெட்டு… தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி மனு…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதிகளில்  கடந்த ஒரு வாரமாக பகல், இரவில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது . சில நாட்களில் இரவு, பகல் வேளையில் 15 மணி நேரம் மின் தடை தொடர்கிறது .  அடிக்கடி மின் வெட்டுக்கான காரணங்களை மக்களுக்கு மின் வாரியம் தெரியப்படுத்ததால், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினர்.

ஐஸ் உற்பத்தி பாதிப்பால மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தவித்து வருகின்றனர். மின் தடைக்கான காரணம் அறிந்து மீண்டும் தொடராமல் சீர் செய்து தடையின்றி மின் விநியோகம் செய்ய வேண்டும். கோரிக்கை நிறைவேறாவிடில், மின் வாரிய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு மண்டபம் உதவி மின்பொறியாளரிடம் கொடுத்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..