இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி இராமநாதபுரம் இராமலிங்கா யோகா சென்டரில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி மக்கள் பாதையின் திட்டங்கள் பற்றியும் கடந்தகால செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.இராம நாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர்சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.இராம நாதபுரம் மாவட்ட தமிழுக்கும் அமுதென்று பேர் திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மாதவன் வாழ்த்துரை வழங்கினார்.இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் போட்டி நடுவர்களாக இராமநாதபுரம் மாவட்ட கம்பன் கழக துணைத்தலைவர் தமிழரசி.
கம்பன் கழக உறுப்பினர் பரமேஸ்வரி ஆகியோர் பங்குபெற்று போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிப்பெண் வழங்கி வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் கவி ஷாலினி , தினேஷ் குமார், நூருல் அமீன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான இன்றைய பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களக்கு நேர்மையாளர் உ.சகாயம் இ.ஆ.ப அவர்களின் கரங்களினால் பரிசுகள் 11-7-19 அன்று வழங்கப்படும்.மண்டபம் ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் ராஜ்கபூர் நன்றியுரை கூறினார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image