சிக்கல் அருகே அரசு பள்ளி மாணவர் லாரி மோதி பலி..

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே காமராஜர்புரத்தைச் சேர்ந்த முருகேசன், முருகேஸ்வரி தம்பதி மகன்  மகேந்திரன்,13.

இவர் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்தார். இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினார். சிக்கல் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.