விளாத்திகுளம் அருகே சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பங்கேற்பு..

விளாத்திகுளம்  அருகேயுள்ள முத்துச்சாமிபுரத்தில் என்.ஐ.ஹெச்.எம் கேட்டரிங் மற்றும் நர்சிங் என்ற தனியார் கல்லூரி திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு புதிய கல்லூரியை திறந்து வைத்து, வகுப்புக்களை தொடங்கி வைத்தார்.

இதன் பின்பு நடைபெற்ற விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள்,கல்வி, விளையாட்டுகளில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுது. இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு விருது வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில் பல்வேறு கட்சி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..