கீழக்கரை ஜும்ஆ மஸ்ஜித் – அல் மத்ரஸத்துல் ஜாமிஆவில் “கீழக்கரை ஹாஃபிழ்களின் கூட்டம்” மற்றும் கீழக்கரை ஹாஃபிழ்கள் பேரவை துவக்கம்..

கீழக்கரை டவுன் காஜியும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் ஷரீஅத் வழிகாட்டு குழு தலைவருமான மவ்லவி ஃபாழில் காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி மக்தூமி M.A. தலைமை வகித்தார். அல்ஹாஜ் முஹம்மது சஹாபுத்தீன், அல்ஹாஜ் சதக் அப்துல் காதர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து ஹாஃபிழ் அஹ்மது சாஜித் கிராஅத் ஓதினார்.

அதை தொடர்ந்து உரையாற்றிய டவுன் காஜி தனது உரையில்,  “சங்கைமிகு குர்ஆனை மனனமிட்ட‌ ஹாஃபிழ்களின் சிறப்புகள் குறித்தும் நமதூரில் முன்பு போல் ஆலிம்கள், ஹாஃபிழ்கள் மற்றும் ஹாஃபிழாக்கள் அதிகம் உருவாக வேண்டும் எனவும் நமதூரில் ஹாஃபிழ்கள் ஒன்றிணைந்து தொடர்பை வழுப்படுத்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இவர்கள் முயற்சியில் இன்னும் அதிகமான ஹாஃபிழ்கள் உருவாக வேண்டும். மக்களை இறை வேதம் அல் குர்ஆனின் தொடர்புடன் அதன்வழி வாழச்செய்ய வேண்டும்” என  குறிப்பிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கீழக்கரையில் உள்ள ஹாஃபிழ்களை ஒருங்கிணைக்கும் விதமாக “கீழக்கரை ஹாஃபிழ்கள் பேரவை – Kilakarai Huffaz Forum” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வமைப்புக்கு தலைவராக பேராசிரியர் மவ்லவி ஹாஃபிழ் K. செய்யது அஹ்மது நெய்னா ஜமாலி ஸித்தீகி M.A.,M.Phil (நடுத்தெரு), செயளாலராக ஹாஃபிழ் A. உமர் அஹ்மது (B.E) (சாலைத்தெரு), பொருளாளராக ஹாஃபிழ் S. ஜஃபர் ஹமீது B.B.A (மேலத்தெரு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தங்களுடைய விபரங்களை பதிவு செய்யாத ஹாஃபிழ்கள் மற்றும் ஹாஃபிழாக்கள் கீழ்காணும் வாட்ஸ்அப் எண்களில் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

+919442141792,
+919042697922,
+919043407810,
+919566297298.

Email: huffazforum.klk@gmail.com

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..