Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை குடிநீர் விநியோகம் சம்பந்தமான சமாதானக்கூட்டம்… தற்காலிக தீர்வு… நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படுமா??…

கீழக்கரை குடிநீர் விநியோகம் சம்பந்தமான சமாதானக்கூட்டம்… தற்காலிக தீர்வு… நிரந்தர தீர்வு விரைவில் ஏற்படுமா??…

by ஆசிரியர்

கீழக்கரை சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களாகிய செங்கநீரோடை, இடுந்தகல்புதூர், அலவாக்கரைவாடி, லெட்சுமிபுரம், சிவகாமிபுரம், மேலவலசை கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆட்சியர் குறை தீர்க்கும் நாள் மற்றும் காவல்துறையில் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் இருந்து வணிக நோக்கத்துடன் எடுக்கப்படும் குடிநீரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதை தொடர்ந்து ஆட்சியர் நடத்திய ஆய்வில் அது உறுதிப்படுத்தப்பட்டது, அதன் விளைவாக  வணிக ரீதியாக எடுக்கும் கனரக வாகனங்களுக்கு நகராட்சி மூலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.  இதனால்  கீழக்கரை பகுதியில் குடிநீர் பற்றாகுறை ஏற்படும் சூழல் ஏற்பட்டது.  இதனால் அப்பகுதிகளில் பதட்டமான சூழலும் ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுக்கவும் அவ்வூர் மக்கள் முடிவு செய்திருந்த நிலையில், இன்று (07/06/2019) திருப்ப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் இதை தொடர்ந்து சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும், அப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணவும் சமாதான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் கீழக்கரை மற்றும் அக்கிராமங்களில் இருந்தும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளை முன் வைத்தனர். அக்கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் ஆட்சியரின் ஒப்புதலுக்கு பிறகு செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தோட்டங்களில் இருந்து குடிநீர் எடுக்க வேண்டும்.
  • கனரக வாகனத்தில் வணிக நோக்கில் தனியார் தோட்டங்களில் குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
  • குடி நீர் தவிர, வேறு தேவைகளுக்கு தண்ணீர் எடுக்க கூடாது.
  • குறிப்பிட்ட 9 “குட்டி யாணை” வாகனத்தில் மட்டுமே குடிநீர் எடுக்க வேண்டும்.

இத்தீர்மானங்கள் நிரந்த தீர்வாக இல்லாவிட்டாலும், ஆட்சியருடன் அடுத்தடுத்த அமர்வுகளில் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அறியப்படுகிறது.

கீழக்கரை நகராட்சியை பொறுத்தவரை 90 சதவீதம் தனியார் வாகனங்கள் கொண்டு வரும் குடிநீரை நம்பியே உள்ளனர்.  கடந்த வருடங்களில்  பல அரசியல் கட்சிகள் கீழக்கரை நகராட்சி பொறுப்பில் இருந்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணாதது மிகவும் வேதனையான விசயம்.

செய்தி:- அபுபக்கர் சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!