Home செய்திகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாகும்.. பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை..

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாகும்.. பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை..

by ஆசிரியர்

ONGC நிறுவனத்தை கிராமங்களில் நுழைய தடை விதித்து ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையேல் போராட்டம் தீவிரமாகும்..பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ஆதிவிடங்கம் கிராமத்தில் விளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு கிராம மக்களுக்கே தெரியாமல் இரவோடு இரவாக கல் நட்டுள்ளதை அறிந்த மக்கள் இன்று (03.06.2019) காலை 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஒன்று திரண்டு ONGC யால் தங்களது விளை நிலங்களில் பதிக்கப் பட்டிருந்த கல்லை பிடுங்கி தூக்கி வீசி எரிந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப் பையன், துணை தலைவர் எம்.கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் திருவாரூர் அகஸ்டின், திருத்துறைப்பூண்டி பாலமுருகன், மன்னார்குடி கிழக்கு பஞ்சநாதன் மற்றும், பாலு, சம்பந்தம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது: காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு ONGC, வேதாந்தா நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அவரது அமைச்சரவை சகாக்களும் மாறி மாறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதிக்காது என்றும், விவசாயிகளிடம் பொய் பிரச்சாரம் செய்து போராட்டத்தை தூண்டுவதை அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு போராட்டத்தை ஒடுக்க நினைப்பது நியாயமா?

கூத்தாநல்லூர் அருகே ஆதிவிடங்கம் கிராமத்தில் மக்களுக்கே தெரியாமல் இரவோடு இரவாக விளைநிலங்களில் கல் நட்டு விளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதை எதிர்த்து மக்களே கல்லை பிடுங்கி எரிந்து போராடுவது தவறா? அனுமதி இல்லாமல் நிலத்தை சூறையாட முயற்சிக்கும் ONGC நிறுவனத்தை தடுத்து நிறுத்த முன்வராதது ஏன்? இதன் மூலம் தமிழக அரசின் உள்நோக்கமும், இரட்டை வேடமும் வெளிப்படுகிறது. உண்மையாக தமிழக அரசு எதிர்க்குமேயானால் ஏற்கனவே எண்ணெய் கிணறுகள் செயல்படும் இடங்கள் தவிர்த்து மற்ற கிராமங்களில் நுழைவதற்கு தடை விதித்து ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்தான தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையேல் காவிரி டெல்டாவில் கிராமங்கள் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகும் என எச்சரிக்கிறேன் என்றார்.அப்போது செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் உடனிருந்தார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!