சட்ட விரோதமாக பவளப்பாறைகளை கடத்தி பதுக்கிய நபர் கைது…

கோவை வனக்கோட்டம், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட கணபதி பகுதியில் பவளப்பாறைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின்படி மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு மற்றும் வனச்சரக அலுவலக குழுவினர் நேற்று (30/5/19) மாலை கணபதியை அடுத்துள்ள மணியகாரன்பாளையம் பகுதியில் தணிக்கை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த சரவணன் த/பெ குணாளன் என்பவர் தனது வீட்டில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்ற நடுவர் முன் நிறுத்தி, நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image