இராமநாதபுரத்தில் சிறைவாசிகளுக்கான சட்ட உதவி மறுவாழ்வு முகாம்..

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, தமிழக சிறைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் (முதன்மை மாவட்ட நீதிபதி) அறிவுறுத்தல் படி ராமநாதபுரத்தில் சிறைவாசி குடும்ப உறுப்பினர்களுக்கு சட்ட உதவி, மறுவாழ்வு பணி முகாம் நிகழ்ந்தது.

இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் வி.கதிரவன், கே.முத்து துரைச்சாமி, ஆர்.பாபு, ஆர்.தியாகராஜன், முருகேசன், சட்ட தன்னார்வ தொண்டர்கள் வினோத், பாரதி, அய்யப்பன், சமூக ஆர்வலர்கள் பவானீஸ்வரி, செல்வி, தமிழ்நாடு கிராம புனரமைப்பு இயக்கம், அவார்டு டிரஸ்ட் உள்ளிட்ட தொண்டு நிறுவன பணியாளர்கள் அடங்கிய திட்டக்குழு அமைக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட சிறைவாசிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மறுவாழ்வு திட்ட முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் துவங்கி வைத்தார். முகாம் ஏற்பாடுகளை இலவச சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் வி.ராமலிங்கம் (சார்பு நீதிபதி) செய்திருந்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…