காட்பாடியில் நக்கல் நையாண்டியுடன் வாக்களித்த துரைமுருகன்…

திமுக பொருளாளர் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முயன்ற வழக்கில் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி காந்திநகரில் வசிப்பதால் அவர்களின் வாக்குகள் அங்குள்ள டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் உள்ளது அங்கு 2 பேரும் ஓட்டு போட்டனர்.

ஆனால் நக்கல் நையாண்டிக்கு பேர் போன துரைமுருகன் போட்டோவிற்கு நக்கலுடன்  போஸ் கொடுப்பதை பார்த்த பார்த்த வேலூர் பாராளுமன்ற தொகுதி மக்கள் எங்களுக்கு ஓட்டு போட முடியாமல் செய்து விட்டு எப்படி நக்கல் போஸ் கொடுக்கிறார் பாரூங்க என்று பதிலுக்கு கிண்டல் அடித்தனர்.

கே.எம்.வாரியார்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..